Monday, 23 October 2017

தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும்

தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றார் தமிழ்நாடு விவசாயிகள்
தொழிலாளர்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். குமார்.
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநிலப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
டெங்கு காய்ச்சலால் மாவட்டம்தோறும் சிறுவர்களும், பெரியவர்களும் அதிகளவு உயிரிழக்கின்றனர். மணல் கிடைக்கவில்லை, கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாட்டால் கட்டட வேலைகள் தடைபட்டு கிடக்கின்றன. இதனால், 50 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

நலவாரியப் பணிகள் நடைபெறவில்லை. ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தவர்களில், 3 ஆண்டுகளாகக் காத்திருந்த பலர் உயிரிழந்துவிட்டனர். இயற்கை இறப்பு நிதி கொடுக்கவில்லை. நலவாரியமே முடங்கிக் கிடக்கிறது. தமிழகத்தில் முழு அதிகாரம் கொண்ட, செயல்படக்கூடிய ஆட்சி அமைய வேண்டும். தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதி வழங்க வேண்டும். தட்டுப்பாடின்றி மணல் கிடைக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment