Friday, 23 December 2022

முட்டாள் என்று முத்திரை குத்தப்படுபவரை இன்னொரு கோணத்தில் பார்த்தால்.....

* ஒரு குட்டிக்கதை.* 

ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களுக்கு கதை ஒன்றை சொல்லத் தொடங்கினார்.

ஏராளமான பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலில் சுற்றுலா சென்ற பயணிகள் கப்பல் ஒன்று விபத்தை சந்தித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கப்பல் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது. மக்கள் அங்குமிங்கும் ஓடித் தங்களை காப்பாற்றிக் கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தனர்.

கப்பலில் இருந்த மக்கள் அங்கிருந்த  உயிர்காப்புப் படகில் ஏறி தப்பிச் செல்ல முயன்றனர். அந்த படகில் மொத்தம் 100 பேர் தான் பயணம் செய்ய முடியும். ஆனால் அதில் 110 நபர்கள் ஏறி விட்டனர். கப்பல் மூழ்கிக் கொண்டிருந்தது. இப்போது கப்பலில் கடைசியாக ஒரு கணவன் அவர்  மனைவி தவிர அனைவரும் படகில் ஏறி விட்டனர்.

அந்த இருவரும் படகில் ஏறினால் படகு மூழ்கி விடும். இருவரில் ஒருவர் வேண்டுமானால் ஏறலாம் என்ற நிலை. முன்னால் நின்ற மனைவி பின்னால் நின்ற கணவனைத் திரும்பிப் பார்த்தாள். கணவன் எதையும் யோசிக்காமல் மனைவியை பின்னுக்கு தள்ளி விட்டு படகில் ஏறிக் கொண்டார்.

மூழ்கிக் கொண்டிருந்த கப்பல் மனைவியோடு சேர்ந்து மூழ்கியது. அப்போது மனைவி சத்தமாக ஏதோ சொன்னாள். கடலின் இரைச்சல் மற்றும் கப்பலில் இருந்த ஆட்களின் சத்தத்தால் மனைவி சத்தமாக கத்திச் சொன்ன வார்த்தைகள் கணவனுக்கு கேட்கவில்லை. அவள் சொன்ன வார்த்தைகள் யார் காதிலும் விழவில்லை. மனைவி நீரில் மூழ்கிப் போனாள்.

ஆசிரியர் கதையை நிறுத்தி கடலில் மூழ்கிக் கொண்டிருந்த போது மனைவி என்ன சொல்லியிருப்பாள் என்று கேட்டார்.
 
மாணவர்களில் பெரும்பாலோர், "நான் உன்னை வெறுக்கிறேன்!" அல்லது "நீ என்னை ஏமாற்றி விட்டாய்!" என்று கூறியதாய் கூறினர்.

ஒரு மாணவன் மட்டும் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். ஆசிரியர் அவனிடம் போய் அவனது பதிலைக் கேட்டார்.

அவன் அமைதியாக “ நம் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் “ என்று கூறியிருப்பார் என்றான்.

ஆசிரியருக்கு ஒரே ஆச்சரியம்.

“இந்த கதையை இதற்கு முன் கேட்டிருக்கிறாயா?” என்று கேட்டார்.

“இல்லை. இப்போது தான் முதன் முறையாக கேட்கிறேன். ஆனால் எனது அம்மா நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பதற்கு முன் இதைத் தான் என் தந்தையிடம் கூறினார்” என்றான்.

ஆசிரியர் கதையை தொடர்ந்தார்.

கப்பல் மூழ்கியது. கடலில் மூழ்கிய மனைவியின் கணவர் வீட்டுக்கு பத்திரமாக வந்து சேர்ந்தார். தன் மகனையும் மகளையும்  நல்லபடியாக வளர்த்து அவர்களை நல்ல நிலைக்கு வர வழிவகை செய்து கொடுத்தார்.

பல வருடம் கழித்து அந்த கணவர் இறந்து விட்டார். அவர் இறந்த பின் அவர் அறையில் இருந்த தந்தையின் டைரியை மகள் படிக்க நேர்ந்தது.
 
 அந்த மனிதன் இறந்த பிறகு, அவளுடைய மகள் தனது உடமைகளைத் திருப்திபடுத்தும் போது தந்தையின்  நாட்குறிப்பை கண்டு பிடித்தார்.
 
அதில் கப்பலில் மனைவி மூழ்கிய சம்பவம் பற்றியும் எழுதப்பட்டிருந்தது.

கப்பலில் சுற்றுலா செல்வதற்கு ஒரு மாதம்  முன்பு தான் அவர் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. புற்றுநோயின் கடைசிக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் குணப்படுத்துவதற்கு வழியில்லாமல் இருந்தது. தன்னுடைய கடைசி நாட்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மனைவியை மகிழ்விக்கவே கப்பலில் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றார்.

அன்று மனைவியை தப்ப வைத்து அவர் கடலில் மூழ்கியிருந்தாலும் தங்களுடைய குழந்தைகளை காப்பாற்றுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

”நானும் அவளுடன் கடலின் அடியாளத்தில் மூழ்கிப் போகவே விரும்பினேன். ஆனால் குழந்தைகளைக் காப்பாற்ற நான் உயிரோடு இருந்தாக வேண்டும் என்ற சூழ்நிலை என்னைப் படகில் குதிக்க வைத்தது”

இந்த வரிகளைப் படிக்கும் போது மகளின் விழியோரம் கசிந்த நீரை அவளின் பெற்றோர் இருவரும் வானுலகில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தனர்.
  
கப்பலில் இருந்து படகில் குதிக்கும் போது கொடூரமான வில்லனாகத் தெரிந்த கணவர் கடைசியில் அவர் எழுதியிருந்த டைரியைப் படிக்கும் போது அழகான பாசமான அப்பாவாகத் தெரிகிறார்.

உலகத்தில் நல்லது தீயது என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது அர்த்தங்கள் மாறுபடுகின்றன. 

விழித்திருப்பவனுக்கு இரவு நீண்டது. விழி திறந்து  உலகைப் பார்ப்பவனுக்கு ஒரு நிகழ்வில் இருக்கும் பல கோணங்களைப் புரிந்து கொள்ளுமளவுக்கு காலம் நீண்டிருக்கும்.

நாம் காணும் ஒவ்வொரு நிகழ்வும் குளத்தில் எறிந்த கற்களைப் போன்றவைகள். அவை கண்ணில் படுவதில்லை. ஆனால் கரைந்து போகாமல் நீருக்குள் அமிழ்ந்து கிடக்கும். மூழ்கித் தேடினால் கிடைக்கும். ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை புரியும்.

முட்டாள் என்று முத்திரை குத்தப்படுபவரை இன்னொரு கோணத்தில் பார்த்தால் அவருக்குள் இருக்கும் புத்திசாலித்தனம் தெரியும்.

Friday, 16 December 2022

ரூபாயை எடுத்துக் கொடுத்து.. யாருக்குகேனும்உணவு பகிருங்கள்" கற்பகம் ஹோட்டலின் ஓனர் கருப்பசாமி

ஒரு சிறிய உணவு விடுதி.
கரூர்  ஜவகர் பஜாரிலுள்ள ஒரு முட்டு
சந்தில்..ஹோட்டல் கற்பகம் இருக்கிறது. அந்த ஹோட்டல் பத்து பேர் மட்டும் அமர்ந்து சாப்பிடலாம்.

கற்பகம் ஹோட்டலின் ஓனர் கருப்பசாமி தானே கல்லாவை கவனிப்பார். உணவு பரிமாறுவதில்
இருந்து அனைத்து வேலைகளும் அவரே. சமையல் வேலைக்கு மட்டும் மாஸ்டர் வைத்து கொள்வார்.

கற்பகம் உணவு விடுதி..முட்டு சந்தில்
இருந்தாலும், நாள் முழுவதும் சற்று,
சுறு, சுறுப்புடன் இயங்கி கொண்டு இருக்கும்.

உணவின் சுவை கூடுதலாக மெச்சும்
படி இருப்பதால், மற்ற உணவு விடுதிகளை காட்டிலும், விலைகுறைவாகவும், தரமாகவும், 
சற்று தாராள அளவு உடையது ஆகவும், இங்கு உணவு பொருட்கள்
இருக்கும்.

கற்பக உணவு விடுதி ஓனரின் கல்லா
டேபிளில் ஒரு சிலேடு தொங்கி கொண்டு இருக்கும். அந்த சிலேட்டில்
காலை நேரம் என்றால்..நான்கு இட்லி
ஒரு டீ  ..என்றும் எழுதப்பட்டு இருக்கும்.

அதை பார்த்து யாரோ ஒருவர் உணவு
விடுதிக்கு சென்று இட்லி சாப்பிட்டு,
டீ குடித்து விட்டு.. சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல்" சிலேட்டை"
காட்டி சென்று விடுவார்.

பின், சிறிது நேரம் கழித்து, கருப்பசாமி மீண்டும்..அந்த சிலேட்டில் 
ஏதோ எழுதி தொங்க விடுவார்.

இப்பொழுது, யாரோ,ஒருவர் முன்னம் 
குறிப்பிட்டதுப் போல் சாப்பிட்டு விட்டு,
"சிலேட்டை" காட்டி காசு கொடுக்காமல் சென்று விடுவார்.
யாரும் அவரை ஏன்? என்று கேட்க
மாட்டார்கள்.

இப்படியாக ஒரு நாளைக்கு பதினைந்து, இருபது நபர் வரை சாப்பிட்டு சென்று விடுவார்கள். இது
வாடிக்கையாக கற்பக உணவு விடுதியில் நடக்கும் செயல்.

புதிதாக கற்பக உணவு விடுதியில்,
சாப்பிட வந்த ஒருவர், தான் சாப்பிட்டதற்கு கல்லாவில் பணம் கொடுக்க சற்று காத்திருந்தார்.

அப்பொழுது.. கருப்பசாமி, பரிமாறி விட்டு கல்லாவுக்கு வந்தார்.
காத்திருந்தவரிடம் பணத்தை பெறும்
முன், அவர் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டவர்.. பணம் கொடுக்காமல்
போகிறார்" என்றார் சற்று பதட்டத்துடன்....

கருப்பசாமி தன் முறுக்கு மீசையை
வருடிக் கொண்டு.." அய்யா.. உங்களை போல் சாப்பிட வருகிறவர்கள் தான் சாப்பிட்டதற்கு
பணம் கொடுத்து விட்டு, இதுப் போன்று உணவுக்கு வழி இல்லாதவர்களுக்கும் சேர்த்து பணம்
கொடுப்பார்கள்.அப்படி, அவர்கள்
கொடுக்கின்ற பணத்திற்கு ஏற்ப, 
"சிலேட்டில் " உணவு வகைகளை எழுதி வைப்பேன். அதை பார்த்து விட்டு..சாப்பிட்டு விட்டு" சிலேட்டை"
கை நீட்டி போவார்கள். இது, இங்கு
வாடிக்கையான நடை முறைதான்"
என்றார்.

மேலும் தொடர்ந்தார்...
" அப்படி பணம் யாரும் கொடுக்கவில்லை என்றால், என் பங்குக்கு நானாக எழுதி போடுவேன்.
யாரேனும், சாப்பிட்டு விட்டு போவார்கள்.நான் சின்ன வயதில்,
ஒரு வேளை சாப்பாட்டுக்கு என்ன..
பாடு பட்டிருப்பேன்" என்று தன் ஈரக்
கண்களை அகல விரித்து அவரிடம்
சொன்னார்.

அப்படி, கருப்பசாமி சொன்னவுடன்...
புதிதாக வந்த வாடிக்கையாளர்...
அவசரமாக, தன் சட்டை பைக்குள்
கை விட்டு.. இரு நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து.. யாருக்குகேனும்
உணவு  பகிருங்கள்" என்று சொல்லி
நகர்ந்தார்.

அந்த முட்டு சந்துக்குள் சர்வ இயல்பாக, சில பைத்தியங்களின்
நடமாட்டம், அவ்வப்பொழுது இருந்து
கொண்டே இருக்கும்.

அவர்களுக்கு மட்டும், உணவு பொட்டலங்கள் கருப்பசாமியிடம் இருந்து கை மாறி விடும். அவர்களுக்கு பிச்சை எடுக்க தெரியாது.. கேட்டு வாங்க தெரியாது..
பசி என்ற உணர்வும் தெரியாது.. ஆனால், கையில் கிடைத்ததை சாப்பிட வேண்டும் என்று மட்டும் தெரியும்.

கருப்பசாமி இப்பொழுது  சிலேட்டில்...
" உறவுகள் மேம்பட சற்று.. உணவிடுங்கள் " என்று எழுதிவிட்டு...
மூவருக்கு மதியம் "சாப்பாடு தயார்"
என்று எழுதி..புன்னகையுடன் கல்லா
டேபிளில் தொங்க விட்டார்........

Saturday, 10 December 2022

கதையின் நீதி 1

ஒருவருக்குத் திடீர் சந்தேகம் வந்தது தன்னுடைய மனைவிக்கு காது கேட்கவில்லையோ ?
ஆனால் இதை மனைவியிடம் நேரடியாகக் கேட்க அவருக்குத் தயக்கம். தயக்கம் என்ன, பயம் தான்.

இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார். அதற்கு அவர் ஒரு எளிய யோசனை சொன்னார் .

இருபது அடி தூரத்தில் இருந்து மனைவியிடம் ஏதாவது பேசிப் பாருங்கள் , மனைவியின் காதில் விழவில்லை எனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்,
பின் பத்து , ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்றுப் பேசுங்கள்.

எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் மனைவிக்கு காதுக் கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம் என டாக்டர் சொன்னார். அதைக் கேட்டவுடன் அந்தக் கணவனுக்கு ஒரே குஷி.

உற்சாகமாக வீடு திரும்பிய அவர் வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த மனைவியிடம் இன்று என்ன சமையல்? எனக் கேட்டார்.
பதில் எதுவும் இல்லை. பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டார். அதற்கும் பதில் இல்லை , ஹாலில் இருந்து கேட்டார் , சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். மனைவியிடமிருந்து பதிலே இல்லை.
போச்சு இரண்டு ஸ்பீக்கரும் அவுட் ஆகிவிட்டது போல என்று மனதில் கன்ஃபார்ம் செய்து விட்டார்.
கடைசி வாய்ப்பாக மனைவியின் காது அருகே சென்றுச் சத்தமாக இன்றைக்கு என்ன சமையல் ?“ எனக் கேட்டார்.

காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே அவர் மனைவி அவரைக் கோபமாக திரும்பிப் பார்த்து, ”ஏன் இப்படி கத்துறீங்க , நீங்களும் வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து , ஹாலில் இருந்து , சமைலறை வாசலில் இருந்து கேட்க , கேட்க நானும் முருங்கைக்காய் சாம்பார் , உருளைக்கிழங்கு பொரியல்னு சொல்லிக்கிட்டே இருந்தேனே , அது உங்கள் காதில் விழவில்லையா ?
காதுல என்ன பஞ்சு மூட்டையா வைச்சிருக்கீங்க எனப் பொரிந்துத் தள்ளிவிட்டாள்...
இப்போது தெரிகிறதா…

பிரச்சினை யார் காதில் என்பது ?

கதையின் நீதி :-

இப்படித் தான் பலர் பிரச்சனையை நம்மிடம் வைத்துக் கொண்டு அது பிறரிடம் இருப்பதாக நாம் நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்

🙏🏼💐🙏🏼💐🙏🏼

Friday, 11 November 2022

வலிகள் தான் வாழ்க்கை - வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது.

தினசரி மார்க்கெட் போவதும், பழம் வாங்குவதும் வழக்கமாக நடப்பது. 

ஒரு ஆயா பல வருடங்களாக ஒரே இடத்தில், ஒரு டிபார்மெண்ட் ஸ்டோர் முன்பு பழ வியாபாரம் செய்து கொண்டு இருப்பார்.

ஆபிஸ் போகவர பார்ப்பேன்.
ஆயாவும் பார்க்கும்.

சரி. இந்த ஆயாவிடம் இன்று வாங்கலாம் என்று முடிவு செய்து போனேன்.

"மாம்பழம் எப்படி  ஆயா..?" 

"எடு ராசா. உனக்கென்ன எச்சாவ கண்ணு சொல்ல போறேன்"

குதாதத் மாம்பழம் நன்றாக இருந்தது.

"எடு கண்ணு.  கல்கண்டு மாதிரி இருக்கும்". 

"எவ்வளவு..?" 

கிலோ 70 ரூபா. நீ 60 ரூபா கொடு போதும்."

60 அதிகமோ.? மனசு பேரம் பேசியது. "அம்பது  போட்டு 2 கிலோ கொடு ஆயா"

"கட்டாது சாமி. அசலே 55 ரூபா வருது."

சரி, வேண்டாம். அப்புறம் வர்றேன்.

நகர முற்படும்போது "சரி எடு ராசா. காலைல மொத வியாபாரம்"

3 கிலோ வாங்கினேன். ஆஹா. நல்ல பேரம். மனசு குதூகலித்தது.  

சில நாட்கள் கழித்து என் ஏரியாவில் இருக்கும் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு போனேன்.

அதனுடன் சேர்ந்த மாதிரி ஒரு கார்ப்ரேட் பழ விற்பனை நிலையம்.

பழங்கள் நேர்த்தியாக அடுக்கி அழகாக இருந்தன.

அதோ. குதாதத். ஆயாவிடம் வாங்கியது போலவே இருந்தது.  என்ன விலை.?

கிலோ 80 என்று எழுதியிருந்தது. "ஏம்மா குதாதத் கிலோ என்ன விலை?" 80 ரூபா"

இங்கே பேரம் பேச முடியாது. ஒரே விலைதான்.

அப்போ, ஆயாவிடம் 50 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கி, அதை பெருமையாக வீட்டில் சொல்லி, ஏனோ மனசு வலித்தது.

மாலை வரும்போது ஆயாவை பார்த்தேன். மெலிதான தேகம். சுருக்கம் நிறைந்த முகம். நடுங்கும் கைகள். ரோட்டில் பழ வியாபாரம்.

என்னை அறியாமல் கால்கள் நின்றது. ஆயாவுடன் இன்னும் 2 வயதான ஆயாக்கள்.

டீ குடித்து கொண்டு  இருந்தார்கள். சரி.  ஆயாவிடம் வேறு ஏதாவது வாங்கலாம். கவனித்தேன்.

ஆயா பக்கத்து புரோட்டா கடையிலிருந்து இரண்டு பார்சல் வாங்கி அவர்களிடம் கொடுக்க அவர்களும் வாங்கி கொண்டு தடுமாறி எங்கோ நடந்து போனார்கள்.

யார் இவர்கள்.?
ஆயாவிடம் விசாரித்தேன் அவர்களைப் பற்றி.

"அவுங்களா.? நம்ம ஊருதான். 

என்ன மாதிரி போக்கத்தவிங்க. நல்லா வாழ்ந்து கெட்டவிங்க. புருஷன் போனதும் புள்ளமார்கள் கண்டுக்கல. 

பணத்தையெல்லாம் புடுங்கிகிட்டு முடுக்கி விட்டுட்டாங்க. 

ஒருத்தி என்னோட  நாத்தனாரு. வயல் வேலைக்கு போயிட்டிருந்தாங்க. இப்ப முடியல. அவ்வளவா வேலை இல்லைப்பா.

பகல்ல கோவில் அன்னதானம் சாப்பிடுவாங்க.

ராத்திரி இங்க வருவாங்க. ஏதோ நான் முடிஞ்சத வாங்கி தருவேன். 

என் குடிசைல தான் அண்டி இருக்குதுங்க. வரவர என் கையிலயும் ஓட்டம் இல்ல.  அதுக்காக அதுங்கள பட்டினி நபோட முடியுமா?  அதான் முடிஞ்சத வாங்கி தாரேன். இதுகளுக்கு நான் தொணை.  எனக்கு இவங்க தொணை.

ஏதோ உசிரு இருக்கிற வரைக்கும் ஒதவியா, ஒன்னுமண்ணா இருப்போம்." 

உனக்கு புள்ளைங்க இருக்கா.?  

எனக்கு அந்த வரம் கெடக்கல கண்ணு. எனக்கு புள்ள இல்லேனு எம்புருஷன் அப்பவே என்னை வுட்டுபுட்டு போயிட்டான். 

அப்பனும் ஆத்தாளும் போனபொறவு ஒண்டிகட்டையா காலத்தை ஓட்டிகிட்டு இருக்கேன்.

அதுக்காக செத்தா போகமுடியும் கண்ணு.?

பொறவு, இதுங்க எங்கிட்ட வந்து ஒட்டிக்கிச்சுங்க. ஏதோ பழவியாபாரம் பண்ணி, கெடைக்கிறத வச்சு வயித்த கழுவிட்டு இருக்கோம்"

மனது வலித்தது. ஆயா சொன்னது ஆயிரம் பாடங்களை கற்று கொடுத்தது. வலிகளே வாழ்க்கையாகி போனது இந்த ஆயா மாதிரி பலருக்கும் இங்கே.?

"வறுமையிலும் நேர்மை. ஏழ்மையிலும் தர்ம சிந்தனை. என் MBA என்னை பார்த்து சிரித்தது.!"

இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். வாழ்க்கை பாடம் ஒன்றை எனக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.

"ஆயா ஏதாவது உதவி வேணுமா" பணம் ஏதாவது தரட்டுமா"

வேண்டாம் கண்ணு. ஏதோ கடவுள் கொஞ்சம் படியளக்கறார் ..

அவங்களுக்கு தான் மாத்து துணி இல்ல. அவங்களுக்கு வேணா ஏதாவது பண்ணு"

சரி. செய்வோம். "ஆயா! இதுல 2000 இருக்கு. இதுல வாங்கி கொடுத்துரு"

"எதுக்கு இவ்வளவு பணம் கண்ணு? 500 போதும்".
மீதியை திருப்பிக்கொடுத்தது ஆயா என்னிடமே!

"இல்ல ஆயா. இருக்கட்டும். எங்க அம்மா இருந்தா வாங்கி தர மாட்டேனா?"

கண்கள் கலங்கியபடி வாங்கிக் கொண்டது ஆயா.

மனசு கொஞ்சம் லேசானது.

என் அம்மா சொல்வாள். "மற்றவர்கள் துன்பங்களை கேட்டால் மட்டும் போதாது. முடிந்த உதவிகளை செய்யணும்"

கிளம்பும்பொழுது ஆயாவிடம் கேட்டேன்,"ஆயா ஆப்பிள் எப்படி.?

கிலோ 120. நீ 110 கொடு சாமி." 

100 ரூபா போட்டு 3 கிலோ போடு"

தமாசுக்குதான் கேட்டேன். ஆயாவின் முகம் சட்டென்று வாடி விட்டது.

"சரி கண்ணு. ஏதோ மகராசன் எங்கிட்ட வந்து வாங்குறியே"  

3 கிலோ வாங்கி 450 ரூபாய் கொடுத்தேன்.

"எதுக்கு இவ்வளவு பணம் கண்ணு.?"  

இல்ல ஆயா. இதையே அதோ அங்கே இருக்கிற கார்ப்பரேட் பழக்கடையில் வாங்குனா ரூ450 கொடுத்திருப்பேன்."

பரவாயில்லை,புடி ஆயா என்று உரிமையோடு அந்தப் பணத்தையும் அதன் கையில் கொடுத்து விட்டேன் இல்லை திணித்து விட்டேன்.

என் பிடிவாதம் பார்த்து, ஆயா முகத்தில் முதன்முறையாக சிரிப்பு. அது என்றும் மறக்காது எனக்கு.

இனி வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது.

பாவம் அவர்கள்.

வெளியே சொல்ல முடியாத பல விதமான வலிகளோடு அவர்களில் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

வலிகள் தான் வாழ்க்கை அவர்களுக்கு.?

படித்ததில் பிடித்தது நன்றி...!

மீள் பதிவு

Friday, 7 October 2022

மனித வாழ்க்கையின் உண்மை...!*

🐐 🐐 🐐 🐐 🐐 🐐

கடவுள் ஒரு நாள் *கழுதையை* படைத்து அதனிடம் சொன்னார்...!

நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் 
நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 
50 வருடங்களுக்கு வாழ்வாய்...!

*இதற்கு கழுதை சொன்னது*

நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்...!

கடவுள் 
கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்...!

🐕 🐕 🐕 🐕 🐕 🐕

அடுத்து ஒரு *நாயை* படைத்து அதனிடம் சொன்னார்...!

நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். 
நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்...!

*இதற்கு நாய் கூறியது :*

கடவுளே ! 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 
15 வருஷம் போதும்...!

கடவுள் 
நாயின் ஆசையை நிறைவேற்றினார்...!

🐒 🐒 🐒 🐒 🐒 🐒

அடுத்து கடவுள் *குரங்கை* படைத்து அதனிடம் சொன்னார்...!

நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். 
நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். 
நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்...!

*இதற்கு குரங்கு கூறியது :*

20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்...!

கடவுளும் 
குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்...!

👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼

கடைசியாக *மனிதனை* படைத்து அவனிடம் சொன்னார்...!

*நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன்*
*நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ*
*20 வருடங்களுக்கு வாழ்வாய்...!*

*இதற்கு மனிதன் கூறினான் :*

20 வருஷம் ரொம்ப குறைவு...! 
*கழுதை* வேண்டாம் என்ற 
30 வருடங்களையும் 
*நாய்* வேண்டாம் என்ற 
15 வருடங்களையும் 
*குரங்கு* வேண்டாம் என்ற 
10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு...!

கடவுள் 
மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்...!

அன்று முதல்
மனிதன் முதல் 
*20 வருடங்களை* 
ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக...!

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 
*30 வருடங்களை*
*கழுதை* போல் எல்லா சுமைகளை தாங்கி கொண்டு அல்லும் பகலும் உழைக்கிறான்...!

குழந்தைகள் 
வளர்ந்தபிறகு அடுத்த 
*15 வருடங்களுக்கு* 
அவன் வீட்டின் *நாயாக* இருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். 
மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்...!

வயதாகி, Retire ஆன 
பிறகு *குரங்கு* போல் 
*10 வருடங்களுக்கு* 
மகன் வீட்டிலிருந்து 
மகள் வீட்டிற்கும், 
மகள் வீட்டிலிருந்து 
மகன் வீட்டிற்கும் தாவி
பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்...!

*மனித வாழ்க்கையின் உண்மை...!*

Tuesday, 9 August 2022

_சில சந்தர்ப்பங்களில்__வாய் மூடி இருக்க பழகிக்கொள்ளுங்கள்!_

_மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது .  மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்._

_(1)- மதத்தலைவர்_
_(2)- வழக்கறிஞர்_
_(3)- இயற்பியலாளர்_

_முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. "கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது._

_ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார்._

_மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர். மதத்தலைவர் தப்பிவிட்டார்._

_அடுத்ததாக வழக்கறிஞர்,
              அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. "கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது._

_"நீதி! நீதி! நீதியே வெல்லும்" என்றார்._

_மேடை இழுக்கப்பட்டது, வழக்கறிஞரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! நீதி அவரை காப்பாற்றிவிட்டது. என்றனர். வழக்கறிஞர் தப்பிவிட்டார்._

_அடுத்ததாக இயற்பியலாளர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. "கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது._

_எனக்கு ஆண்டவன் பற்றியும் தெரியாது, நீதி பற்றியும் தெரியாது. ஆனால் அங்கே தூக்கு மேடை கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கிறது. அதனால்தான் கயிறு கழுத்தை பதம் பார்க்கவில்லை என்பது எனக்குத் தெரியும்" என்றார்._ 

_உடனே தூக்குமேடையை பரிசீலித்தனர். அங்கே அந்த கோளாறு இருந்தது. அதனை சரி செய்தனர். பின்னர் இயற்பியலாளர் தூக்கில் ஏற்றப்பட்டு தலையும் துண்டிக்கப்பட்டது._

நீதி:-
--------
_சில சந்தர்ப்பங்களில்_
_வாய் மூடி இருக்க பழகிக்கொள்ளுங்கள்!_

_தெரிந்த உண்மைகளையெல்லாம்  உளரிக்கொட்டுவதால் உங்கள் கழுத்துக்கே கூட ஆபத்தாகலாம்!!_

_சிலவேளை முட்டாளாக_ _இருப்பதுதான்_
_புத்திசாலித்தனமானது!

Friday, 22 July 2022

குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.

"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

"வருத்தப்படாதே,

என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு.

"என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.

வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது.

அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

"அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.

பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.

இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது.

இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான்.

இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான்.

ஆனால் ஆச்சர்யம்!

பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.

இதே போல் இன்னொரு சம்பவம்.

அதிலும் டாக்ஸி ஓட்டுனர்,

பொறுமை இழக்கவில்லை.

ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார்.

இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு.

இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார்.

"எப்படி இவ்வளவு பொறுமையாய்,

யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?"

அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர்,

"என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது.

வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும்

குப்பைகளையெல்லாம் என் மனதில்

சேர்த்துக்கொள்ளவில்லை.

அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு

பதில் சொல்லிக்கொண்டிருந்தால்

நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."

இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய

வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது.

ஆமாம்,

நண்பர்களே,

நமக்கு இலக்குதான்

முக்கியமே தவிர

இடையில் வரும்,

கொஞ்ச நஞ்ச

இடைஞ்சல்கள் அல்ல..

- படித்ததில் பிடித்தது...!

இன்றைய அரசியல் (இந்த கதை சிரிக்க மட்டுமல்ல.... ) சிந்திக்கவும்.

ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார்.
ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது.
நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.
இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.
பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.
அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது.
கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..?
என்ற குழப்பம் உண்டாகியது..
எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று..
விஏஓவிற்கு ஒரு கடிதம் எழுதினான்.
மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான்.
கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்நன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்..
நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு..
பேரன் எழுதுன கடிதத்ததையும் சேர்த்து
அனுப்பினார்.
தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது.
தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு..
மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்க
ளானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.
கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.
கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே..
கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான்.
கேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்..
நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார்.
அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு..
ஆத்து தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்..
அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார்.
கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார்.
அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்..
என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..
ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று..
மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து..
மாநில அமைச்சரிடம் இருந்து
மாவட்ட கலெக்டருக்கு வந்து..
மாவட்ட கலெக்டரிடமிருந்து
தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து
விஏஓக்கு வந்து..
விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது...[இன்றைய அரசியல்]

(இந்த கதை சிரிக்க மட்டுமல்ல.... ) சிந்திக்கவும்.

Wednesday, 25 May 2022

பொறுமை நன்மையே செய்யும்

படித்ததில்_பிடித்தது
நான் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றேன். மெனு படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தனர் தேவைக்கு ஆர்டர் கொடுத்தார்கள். 

சிறிது நேரத்திலேயே உணவு வந்தது.கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டார்கள். எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார்.தன்னை அந்த ஹோட்டலில் எல்லோருக்கும் தெரியும்.  அதனால் தான் விரைவான மற்றும் சிறந்த சேவை... பிச்சை எடுப்பது போல் காத்திருக்க தேவையில்லை என்றார். என்னால் பொறுக்க முடியவில்லை. ஆர்டரை கேன்ஸல் செய்து விட்டு புறப்படலாம் என்று வெயிட்டரை கூப்பிட்டேன்.
வெயிட்டர் அமைதியாக என்னிடம் கூறினார். சார் உங்களுடைய ஆர்டர் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். அதை எங்கள் தலைமை செஃப் அவரே தயாரித்து கொண்டிருக்கிறார்.
அவர்களுக்குத் தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டது.  எனவே உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார் என்றார்.
நான் அமைதி ஆனேன் பொறுமை காத்தேன்.
சிறிது நேரத்தில் என் உணவு வந்தது.  அதை 6 வெயிட்டர்ஸ் எனக்கு பறிமாறினார்கள். மிகவும் சுவையான உணவு  நான் ஆர்டர் கொடுக்காதது.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.
 நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார்.அவர் என் பள்ளி நண்பர். அவர் என்னை ஆச்சரியப்படுத்த விரும்பினார்.எனது எளிய உணவை பணக்கார உணவாக மாற்றி, எனக்கு ராயல் ட்ரீட் கொடுக்குமாறு சமையலறைக்கு அறிவுறுத்தினார்.பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை தங்களுக்கு ஏன் அத்தகைய சேவை கிடைக்கவில்லை?  என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள்
அது தான் வாழ்க்கை.
சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள்.  தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள்.  கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள்.
உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம்.  இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் திருப்புமுனை வரவில்லையே.
அந்த மன உளைச்சலால், ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்... 
கவலை கொள்ளாதீர்கள்...
கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம்.  அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும்.  அதை
தலைமை சமையல்காரர் கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும்.
பொறுமையாக நம் கடமைகளை சரி வர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.
அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள்.ஆசீர்வதிக்கப்பட்ட உங்கள் நாளை அப்போது அனுபவிக்கவும். 
நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும்.யாராலும் தடுக்க முடியாது

Friday, 18 February 2022

படிப்பைத் காட்டிலும் படிப்பினை முக்கியம்

இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருத்தர் டாக்டர் ஆகிடலாம் என்று  கிளினிக் ஒன்றைத் திறந்தார்..

வாசலில் ஒரு போர்டு எழுதினார்.

"எந்த வியாதியாக  இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.உங்கள் வியாதி குணமாகவில்லையெனில்  1000 ரூபாயாக திருப்பி தரப்படும் "

இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார்.

"டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில .."

" நர்ஸ் அந்த 23 ம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீர் டாக்டர்

நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு " அய்யோ டாக்டர் இது  பெட்ரோல் ஆச்சே" என்று அலறினார் இவர்.

" வெரி குட் .இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது ..500 ரூபாய் ஃபீசை எடுங்கள் "

உண்மையான டாக்டர் வேற வழி இல்லாமல் 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.

ஆனாலும் ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.

" டாக்டர் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாருக்கு குணப்படுத்துங்க " என்றார்.

" நர்ஸ் அந்த 23 ம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீர் டாக்டர்.

" அய்யோ டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே " என்று அலறினார் இவர்..

" வெரி குட் உங்க மெமரி பவர் நல்லாய்டுச்சு 500 ரூபா எடுங்க " 

இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார் .

" எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்"

" சாரி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீர் டாக்டர் 

"இது 500 ரூபாய் நோட்டாச்சே " என்று பதறினார் இவர்.

" வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய் " 

பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்... படிப்பாவது..கிடிப்பாவது .......!!!!