Friday, 29 September 2023

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்? பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேறுமா? கோட்டையை நோக்கி நகரும் ஆசிரியர்கள்

சென்னை: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி இன்று, சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டையை நோக்கி பேரணியை அறிவித்துள்ளது.. பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் ஆசிரியர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தர உள்ளனர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட் அருகில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் செய்தியாளர்களிடம் சொன்னதாவது:

முரண்பாடுகள்: திமுக தன்னுடைய சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்றது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவோம் என்றது.

கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட உயர் கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்குவோம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் வழங்குவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் ஆட்சி பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. மேற்கண்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற முன்வரவில்லை.

ஏமாற்றம் : இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ, டிட்டோஜாக் உள்ளிட்ட கூட்டமைப்புகள் போராட்டங்கள் அறிவித்ததை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பலமுறை நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் எவ்வித பயன்களையும் அளிக்கவில்லை. இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு செய்து திரும்பப் பெற்று ஆசிரியர்கள் முழு நேரமும் சுதந்திரமாக மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். இணையதளத்தில் புள்ளி விவரங்களை பதிவு செய்யும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து முழுமையாக கற்பித்தல் பணியில் ஈடுபட தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள்: அதேபோன்று ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் பதவி உயர்வில் செல்ல தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய தேவை இல்லை என்பதை தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்து, ஒரு சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும்..

இன்னும் இதுபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் சார்பில் செப்டம்பர் மாதம் 29 ம் தேதி, சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டையை நோக்கி பேரணியாக சென்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளிப்பது என மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாழ்வாதார கோரிக்கைகள்: தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சார்ந்த வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறியிருந்தார்.

அந்தவகையில், இன்றைய தினம், ஆசிரியர்கள் கோட்டையை நோக்கி பேரணி மேற்கொள்ள உள்ளனர்.. ஏற்கனவே அரசு ஊழியர்களும், தங்களது கோரிக்கையை தமிக அரசு நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கத்தை கொட்டிவருகிறார்கள்..

வாக்குறுதிகள்: வாக்குறுதியில் சொன்ன எதையுமே நிறைவேற்றாத நிலையில், முதல்வர் ஸ்டாலின் நுாறு சதவீதம் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதாக சொல்கிறார்.. அரசு ஊழியர்களுக்கான கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து வரும்நிலையில், ஆசிரியர்களும் போராட்டத்தை தொடங்கி உள்ளது, திமுக அரசுக்கு தர்மசங்கடத்தை தந்து வருகிறது.

சந்திரயான் - 3 தென் துருவத்தில் இல்லை : அண்டவியல் விஞ்ஞானியின் பரபரப்பு தகவல்

சந்திரயான் - 3 தரையிறங்கியதாக இஸ்ரோ தெரிவித்த தளம் நிலவின் தென் துருவத்தில் இல்லை என சீன அண்டவியல் விஞ்ஞானியும், சீன அறிவியல் அகடமியின் உறுப்பினருமான ஓயாங் ஜியுவான் பரபரப்புக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் வரலாற்றுச் சாதனையை மறுத்து பேசும் அவர் அதற்கான விஞ்ஞான ரீதியான விளக்கத்தையும் கொடுத்துள்ள நிலையில், இந்த விடயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மேலும் கூறுயைில், பூமியில், தென் துருவமானது 66.5 மற்றும் 90 டிகிரி தெற்கே வரையறுக்கப்படுகிறது. ஏனெனில் அதன் சுழற்சி அச்சு சூரியனுடன் ஒப்பிடும்போது சுமார் 23.5 டிகிரி சாய்ந்துள்ளது.

சந்திரனின் சாய்வு 1.5 டிகிரி மட்டுமே என்பதால், துருவப் பகுதி மிகவும் சிறியதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

நாசா சந்திரனின் தென் துருவத்தை 80 முதல் 90 டிகிரியாகக் கருதுகிறது.

அதே நேரத்தில் ஓயாங் ஜியுவான் சந்திரனின் 1.5 டிகிரி சாய்வைப் பிரதிபலிக்கும் வகையில் வெறும் 88.5 முதல் 90 டிகிரி வரை சிறியதாக இருப்பதாக கூறுகின்றார்.

சந்திரயான் -3 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ அனுப்பியது.

இந்த விண்கலமானது பூமியிலிருந்து சந்திரனுக்கு பயணிக்க சுமார் ஒரு மாதம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளததையடுத்து ஓகஸ்ட் 23 அன்று தரையிறக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து தனது பணியையும் வெற்றிகரமாக செய்து வந்தது. ஆனால் தற்போது உறக்க நிலையில் இருந்து வருகின்றது. அதை எழுப்பும் பணிகளை இஸ்ரோ மீண்டும் செய்து வருகின்றது.



நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி -- தொடக்கக் கல்வி இயக்குநர்

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி -- தொடக்கக் கல்வி இயக்குநர்

நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!

படித்ததில் 
வலித்தது...

ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய சிறு கதை...

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். 

கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். 

ஒரு சமயம், 
அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். 

ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். 

அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். 

அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். 

ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான். 

ரயில் வருகிற நேரம்...

ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான். 

பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான்.  அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான். 

தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.

காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள். 

அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா. 

"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான். 

ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.

முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்... நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...

செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், "அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" என கதறி அழுகிறான். 

😍💔

ஆகவே நாம், 

நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!