ஞானம்,அறிவு இரண்டிற்கும் உள்ள வித்யாசம்!!!!
Saturday, 25 December 2021
Tuesday, 21 December 2021
மற்றவர்களிடம் இரக்கத்தைக் காட்ட நீங்கள் தயாராக இருக்கும்போது நீங்கள் செம்மலாகவும் மாற்ற படுகிறீர்கள்.
"கதை இரண்டு"
ஒரு நாள் மதியம், நான் ஒரு நண்பருடன் புறநகரில் நடந்து
Saturday, 18 December 2021
அச்சத்தை நீக்கி ஆரோக்கியம் வளர்ப்போம்....
குட்டிக்கதை:
அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.
“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள்.
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.
ஆனால் ஒரு கிலோகூட எடைகூட கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்
. மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.
அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்,
“அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.
கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன்.
அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.”
அச்சமின்மையே ஆரோக்கியம்!
அச்சத்தை நீக்கி ஆரோக்கியம் வளர்ப்போம் நண்பர்களே !!!
(படித்ததில் பிடித்தது)
Thursday, 18 November 2021
ஆசிரியர் என்பவர் இப்படி தான்..... கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம்
ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் தன்னை தெரிகின்றதா ? என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் என்றார்.
இளைஞர் கூறினார்.... "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது, என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் .
"உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார்.
மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். *எப்படி என்ன தாக்கம் உங்களிடத்திலே உண்டாக்கினேன்* எனக் கேட்டார் ஆசிரியர்.
ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது.
எனவே அதனை திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன்.
அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார்.
நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது.
ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார்.
எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார்.
அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை.
பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றி கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னை திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள்.
என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படி தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார்.
மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார். "ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர்.
*ஆசிரியர் கூறினார்* "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.
Sunday, 7 November 2021
நம்பிக்கை என்ற ஒன்றால் மட்டுமே நமது வாழ்வில் முன்னேற முடியும்.
ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.
அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு " ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.
அதற்கு இவர் " எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.
" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால் அவர்.
" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.
" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.
அசந்து போனார் இவர்...
" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.
உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.
பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.
பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.
இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.
மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.
இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்
அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார்
இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?" என்றார்.
அந்த பெண்மணி " இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார்.
ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.
எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.
" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு. " என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும்...
#whatsapp_message
Friday, 8 October 2021
மனித வாழ்க்கையின் உண்மை..
🐐 🐐 🐐 🐐 🐐 🐐
கடவுள் ஒரு நாள் *கழுதையை* படைத்து அதனிடம் சொன்னார்...!
நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும்
நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ
50 வருடங்களுக்கு வாழ்வாய்...!
*இதற்கு கழுதை சொன்னது*
நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்...!
கடவுள்
கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்...!
🐕 🐕 🐕 🐕 🐕 🐕
அடுத்து ஒரு *நாயை* படைத்து அதனிடம் சொன்னார்...!
நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான்.
நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்...!
*இதற்கு நாய் கூறியது :*
கடவுளே ! 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு
15 வருஷம் போதும்...!
கடவுள்
நாயின் ஆசையை நிறைவேற்றினார்...!
🐒 🐒 🐒 🐒 🐒 🐒
அடுத்து கடவுள் *குரங்கை* படைத்து அதனிடம் சொன்னார்...!
நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும்.
நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய்.
நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்...!
*இதற்கு குரங்கு கூறியது :*
20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்...!
கடவுளும்
குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்...!
👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼
கடைசியாக *மனிதனை* படைத்து அவனிடம் சொன்னார்...!
*நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன்*
*நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ*
*20 வருடங்களுக்கு வாழ்வாய்...!*
*இதற்கு மனிதன் கூறினான் :*
20 வருஷம் ரொம்ப குறைவு...!
*கழுதை* வேண்டாம் என்ற
30 வருடங்களையும்
*நாய்* வேண்டாம் என்ற
15 வருடங்களையும்
*குரங்கு* வேண்டாம் என்ற
10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு...!
கடவுள்
மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்...!
அன்று முதல்
மனிதன் முதல்
*20 வருடங்களை*
ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக...!
கல்யாணம் செய்து கொண்டு அடுத்த
*30 வருடங்களை*
*கழுதை* போல் எல்லா சுமைகளை தாங்கி கொண்டு அல்லும் பகலும் உழைக்கிறான்...!
குழந்தைகள்
வளர்ந்தபிறகு அடுத்த
*15 வருடங்களுக்கு*
அவன் வீட்டின் *நாயாக* இருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான்.
மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்...!
வயதாகி, Retire ஆன
பிறகு *குரங்கு* போல்
*10 வருடங்களுக்கு*
மகன் வீட்டிலிருந்து
மகள் வீட்டிற்கும்,
மகள் வீட்டிலிருந்து
மகன் வீட்டிற்கும் தாவி
பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்...!
*மனித வாழ்க்கையின் உண்மை...!*
Subscribe to:
Comments (Atom)