Tuesday, 31 October 2017

வீட்டு சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிரடி உயர்வு!!!

வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்
புதன்கிழமை (நவ.1) முதல் ரூ.93.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இப்போது இதன் விலை ரூ.750-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு புதன்கிழமை (நவ.1) முதல் பதிவு செய்வோருக்கு ரூ.750-க்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.479.11-லிருந்து ரூ.483.69-ஆக, அதாவது ரூ.4.58 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் விலையேற்றம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிக் கணக்கில் எவ்வளவு?
வீட்டு உபயோகத்துக்கு மானியம் அல்லாத சிலிண்டரை புதன்கிழமை (நவ.1) முதல் பதிவு செய்து ரூ.750-க்கு வாங்கும் நுகர்வோருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.266.31 செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவ.,5 வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: மன்னார் வளைகுடா அருகே மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 5 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மழை:

இதனிடையே சென்னையில் கொளத்தூர், சவுகார்ப்பேட்டை, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, சேத்துப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.

Friday, 27 October 2017

குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகள்

குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகள்
குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகளின் கண்காட்சி தலைப்புகள், நிதி ஒதுக்கீடு, பரிசுகள் விபரம், & செய்யவேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை
🔆 கண்காட்சி தலைப்புகள்
”நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு’’
1.ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
2. வன மேலாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு
3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
4. டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள்
5. கணித மாதிரியாக்கம்
இத்தலைப்பின் கீழ் மேற்குறிப்பிட்ட உட்கருத்துப் பொருட்களை உள்ளடக்கி அறிவியல் கண்காட்சிக்கான மாதிரிகளை ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் செய்யவேண்டும்.
"The Green India" ''Smart City'' ''Digital India'' ''Swachh Bharat'' - ஆகிய தலைப்புகளிலும் மாதிரிகளை செய்து கண்காட்சியில் இடம் பெற செய்யலாம்.
🔆 இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
(கண்காட்சி நடைபெறும் ஒரு குறுவள மையத்திற்கு வழங்கப்படும் தொகை)
மாதிரிகள் செய்ய பொருள்கள் வாங்க - ரூ.11000
🔆 பரிசுகள் விபரம்
பரிசுகள் - தொடக்க நிலை- முதல் பரிசு - ரூ. 400 இரண்டாம் பரிசு - ரூ. 300 மூன்றாம் பரிசு - ரூ. 200
பரிசுகள் - உயர் தொடக்க நிலை- முதல் பரிசு - ரூ.600 இரண்டாம் பரிசு- ரூ.500 மூன்றாம் பரிசு - ரூ.400
சிறந்த செயல்பாடு கொண்ட ஒரு தொடக்க நிலை பள்ளிக்கு - ரூ.300
சிறந்த செயல்பாடு கொண்ட ஒரு உயர் தொடக்க நிலை பள்ளிக்கு - ரூ.300
பேணர் மற்றும் சான்றிதழ் செலவு
(தொடக்க நிலை 3 பரிசு, உயர்தொடக்க நிலை 3 பரிசு) - ரூ. 500
கண்காட்சியில் கலந்து கொள்ள வரும் பள்ளி ஆசிரியர்கள்
மற்றும் மாணவர்களுக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்க - ரூ.1500
மொத்தம் - ரூ. 16000/-
இத் தொகையினை கண்காட்சி நடைபெறும் CRC மையத்தில் கலந்து கொள்ளும் பள்ளிகளுக்கு பொருள்கள் வாங்க சம்மாக பிரித்து கொடுக்க வேண்டும்.
🔆 பள்ளி வாரியாக செய்யப்பட வேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை
1. தொடக்கப் பள்ளி - ( I to V ) - 2 மாதிரிகள்
2. நடுநிலைப் பள்ளி - ( I to VIII ) - 4 மாதிரிகள் [( I to V)- 2 மாதிரிகள்
( VI to VIII) - 2 மாதிரிகள்]
3. மேல்நிலை/ உயர்நிலைப் பள்ளி - () - 2 மாதிரிகள்

Thursday, 26 October 2017

ஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியமும் ஆசிரியர் சங்கங்களும் - ஓர் கண்ணோட்டம்.


அன்பார்ந்த ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வணக்கங்கள். ஆறாவது ஊதிய குழுவினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள

ஊதிய முரண்பாடுகள் முழுமையாக இன்னமும் சரி செய்யப்படவில்லை. தற்போது ஆசிரியர் சங்கங்களால் ஏற்ப்பட்ட நிலைகளை அரசாணையில்    குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை குறிப்பிட்டு ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

ஆறாவது ஊதிய குழு அரசாணை 234 நாள்.1.6.2009  வெளியிடப்பட்டபோது, தொகுப்பூதியத்தில் பணியேற்று 1.6.2006 - இல் காலமுறை ஊதியத்திற்கு வந்தவர்கள் 1.6.2006 - இல் பெற்று வந்த ஊதியம் பின்வருமாறு,

             அடிப்படை ஊதியம்              :   4500

              அகவிலைப்படி ஊதியம்    :   2250

              அகவிலைப்படி 24%              :   1620

                                                                   =======

       (DA G.O.188.Dt.17.4.06)  TOTAL      :     8370

                                                                  =======

ஆறாவது ஊதிய விகிதம் G.O. 234 Dt.1.6.2009 - இல் வெளியான போது இவ்வகையான இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்

                          அடிப்படை ஊதியம்     :    5200

                          தர ஊதியம்                     :    2800

                          அகவிலைப்படி              :    NIL

                                                                          =======

(New DA (2%) only from 1.7.2006) TOTAL   :     8000

                                                                          =======

முந்தைய ஊதிய விகிதத்தில் பெற்றுவந்த ரூ.8370 ஐ விட புதிய ஊதிய விகித ஊதியம் ரூ.370 குறைவாக இருந்தது. ( 8370 - 8000 = 370)

இவ்வாறான நிலை மொத்தமிருந்த 29 ஊதிய பிரிவினர்களில் 03 ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டது. கல்வித்துறையில் 1.6.2006 இல் காலமுறை ஊதிய விகிதத்திற்கு உட்படுத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  மட்டுமே ஏற்ப்பட்டது. அதனை கீழே உள்ள அட்டவணை மூலம் அறியலாம். இந்த அட்டவணை தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A) மூலம் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பை பல்வேறு சங்கங்கள் அன்றைய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனால் 1.1.2006 முதல் 31.5.2009 வரை பணியேற்றவர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக்கொள்ள வாய்ப்பு  கொடுக்கப்பட்டது.

பெற்றுவந்ததை விட குறைவான ஊதியம் பெறும் நிலை எந்தெந்த ஊதிய பிரிவினர்களுக்கு ஏற்பட்ட்தோ  அதனை தெளிவாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்ததால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்பட்டிருக்கும். சற்று பொறுமையாக படியுங்கள்.

(எப்படி கொண்டு சென்றனர், உள்ளதை உள்ளபடியே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பு சரி செய்யப்பட்டிருக்கும் என்பதையும், தவறான தகவலை அரசுக்கு கொடுத்ததால் பெற்று வந்ததை விட நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதியத்தில் குறைவு ஏற்படாத ஊதிய பிரிவினர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக் கொள்ள வழி வகை ஏற்ப்படுத்தியதையும் நீங்கள் அறிந்துகொள்ள உங்கள் முன் வைக்கிறேன்.)

               01.01.2006 முதல் 31.5.2009 வரை புதிய நியமனதாரர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தில் குறைவு ஏற்படுவதாக சங்கங்கள் அரசுக்கு தெரிவித்துள்ளன. ஆனால் உண்மை நிலவரமோ மொத்தமிருந்த ஊதிய பிரிவினர்களில் மூன்று ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டுள்ளது.  அரசாணை  258 நாள் 23.5.2009. இல் உள்ளதை படியுங்கள்.

Certain Employees / Teachers  Associations have brought to the notice of Government that the employees appointed as fresh recruits on or after 1.1.2006 and upto the date of issue of Orders happen to face loss in emoluments while fixing their pay in the revised pay structure and therefore requested to rectify the same by granting pay protection of allowing the fitment benefit to the new entrants as was allowed in the earlier pay commission periods.

  முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அதற்க்கு பின்னர் தனி ஊதியம் 750 கொடுத்தாலும் அகவிலைப்படிகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் 1.1.2009-க்கு பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு முந்தைய ஊதிய விகித ஊதியமே அதிகமாக உள்ளது.

பணி ஒய்வு பெற்றவர்களை மதிக்கிறோம். விழிப்புணர்வுகளுக்காக பாதிப்புகளை இடைநிலை ஆசிரியர்களின் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.

பணியாளர்கள் அங்கம் வகிக்க வேண்டியது

                 பணியாளர் சங்கத்தில்

    பணி  ஓய்வு பெற்றவர்கள் இருக்க வேண்டியது

ரூ. 750 தனி ஊதியம் குறித்து தமிழ்நாடு அரசு நிதித்துறை(சிஎம்பிசி) கடித எண் 8764 சிஎம்பிசி 2012-1 நாள் 18.04.12 ல் பக்கம் 2 ல் பத்தி 2(ஆ) ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்

ஆ) மேற்குறிப்பிட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படும்தனி ஊதியம் ரூ.750 ஆண்டு உயர்வுக்கும் அகவிலைப்படிக்கும் ஓய்வூதியத்திற்கும்கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவ்வகை ஆசிரியர் பணியிடங்களில்இருந்து பதவி உயர்வு பெற்றுசெல்லும் ஆசிரியர்களுக்கு உயர்பதவியில் ஊதியம் நிர்ணயம் செய்யும் போதுஇத்தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர்உயர்பதவியில் இத்தனி ஊதியம் அனுமதிக்கப்படக் கூடாது. என விளக்கம்கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் சந்தேகம் என்னவென்றால் பதவி உயர்வுக்கான ஊதியநிர்ணயத்தின் போது 3 சதவீதத்திற்கு மட்டுமே தனி ஊதியம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

21.11.11 ல் இடைநிலை ஆசிரியர் பதவியில் பெற்ற ஊதியம்

Pay 14030 + 2800 GP + 750 PP = Total = 17580

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நாள் 22.11.2011

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு அனுமதிக்கப்படும் ஊதிய உயர்வுத் தொகை

Pay 3 % 530 + 1800GP = 2330

22.11.2011 ல் பட்டதாரி ஆசிரியர் பதவியில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம்

Pay 15310 + 4600 GP = 19910

இதில் என்ன சந்தேகம் என்றால்

15310 என்பது 14030 + 530 + 750 என்பதன் கூட்டுத் தொகை.

இந்த 750 இதனுடன் சேருமா?

அப்படி சேர்க்கும் பட்சத்தில் கிரேடு ஊதியம் 4600 + 750 மொத்தம் 5350 என்றுஆகாதா?

ஒரு பதவி உயர்வின் போது 3 சதவீதம் ஊதிய உயர்வு என்பது மட்டும் அல்லாமல் 750ம் ஊதிய உயர்வாக கணக்கிடப்படாதா? அப்பொழுது ஒரு பதவி உயர்வின் போது 750 + 530 என 1280 ஊதிய உயர்வாகக் கிடைக்குமா?

750 PP Case Regarding Documents]. Have a look at it! http://www.trbtnpsc.com/2016/01/750-pp-case-regarding-documents.html?m=1

ஆறாவது ஊதியக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தியதில் இருந்தே இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்சினை தொடங்கி அது ஒரு நபர் குழுவில் தீர்க்கப்படும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மத்திய அரசு வழங்கும் ஊதியமான 9300-34800 + 4200 என்ற ஊதியத்தை வழங்க இயலாமைக்குப் பல்வேறு நொண்டிச் சாக்குகளைக் கூறிய கடந்த கால அரசு, அதற்குப் பதிலாக ரூ 750 ஐ தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கியது.

இதனால், 01.01.2006 முதல் 31.12.2010 வரை இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரியாசிரியர் பதவி உயர்வு பெற்றுச் சென்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ரூ 750 தனி ஊதியத்தை இழந்தது மட்டுமல்லாமல் தமக்குப் பின்னால் அதாவது 01.01.2011க்குப் பிறகு பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களைக் காட்டிலும் குறைவான ஊதியத்தைப் பெறும் நிலைக்கு ஆளாயினர்.

பல்வேறு சங்கவாதிகள் இப்பிரச்சினை சார்ந்த விரிவான கருத்துருக்களை மூன்று நபர் குழுவுக்கு வழங்கப்பட்டு தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவாவது வழங்கப்பட்டால்தான் ஊதிய முரண்பாடுகள் தீரும் எனத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நீண்ட காலமாக மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற தொடக்கப் பள்ளி முதல் முதுகலை ஆசிரியர் அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களால் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டும், போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் மூன்று நபர் குழுவின் அறிக்கையில் இப்பிரச்சினை சார்ந்த ஒரு அம்சம் கூட இல்லாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

அதே சமயம் ஆசிரியர் அல்லாத பிற துறைகளுக்கு ஏராளமான திருத்தங்களை வாரி வழங்கியிருக்கிறது. இவ்வாறிருக்கையில், ரூ 750 தனி ஊதியத்தை 01.01.2011 முதல் வழங்கியதை எவ்வித மாற்றமும் செய்யாத மூவர் குழு, தற்போது உதவியாளர்களுக்கு மட்டும் தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவும் 01.04.2013 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் வழங்கியிருக்கிறதே! இது மட்டும் எப்படி சாத்தியமாயிற்று?

தனக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? ஒரு கண்ணுக்கு வெண்ணையயும், மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பையும் ஏன் வைக்க வேண்டும்? 01.01.2006 முதல் கருத்தியலக்கத்தானே வழங்கக் கோருகிறோம்? அது அரசுக்கென்ன பெரும் நிதிச்சுமையையா ஏற்படுத்தப்; போகிறது? மாற்றாக பல்வேறு ஊதிய முரண்பாட்டைத்தானே களையப்போகிறது! ஆகவே மூன்று நபர் குழுவின் செயல்பாடுகள் ஆசிரியர்களை குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களை அவமானப்படுத்துவதாகவே அமைந்துள்ளது

Tuesday, 24 October 2017

டிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

டிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
டிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும்  என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் ரூ.486 கோடி செலவில் அனைத்து பள்ளிகளும் கணினி மயமாக்கப்படும் என சென்னை அசோக்நகரில் பள்ளி விழா ஒன்றில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். நவம்பர் 15-ம் தேதி முதல் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என செங்கோட்டையன் கூறியுள்ளார்

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான அரசாணையை நிதித்துறையின் சம்பள பிரிவு வெளியிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப்பின் பதவி உயர்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை நிர்ணயிக்க புதிய குழு ஒன்றை தமிழக அரசு நிர்ணயித்தது. அந்தக் குழு ‘பே மேட்ரிக்ஸ்’ முறைப்படி 2 விதமாக சம்பளத்தை நிர்ணயம் செய்யும் முறையை பரிந்துரை செய்துள்ளது.

ஒன்று பதவி உயர்வு பெறும் தேதியிலிருந்து கணக்கிடப்படும் சம்பளம் உயர்வு. மற்றொன்று முதலில் வகித்த பதவியில் சம்பள உயர்வு பெற்ற தேதியில் இருந்து கணக்கிடப்படும் சம்பள விகிதம். இந்த இரண்டில் எந்த முறை என்பதை அரசு ஊழியர்களே தேர்வு செய்து கொள்ளலாம். (அ) பதவி உயர்வு பெறும் தேதியிலிருந்து கணக்கிடும் முறை:

ரூ.31, 300 அடிப்படை சம்பளம் பெறும் ஜூனியர் அசிஸ்டெண்ட் 8ம் நிலையில் இருந்து, அசிஸ்டெண்ட்டாக 10ம் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டால், முதலில் 8ம் நிலைக்கான சம்பள உயர்வு சேர்க்கப்பட்டு அவரது சம்பளம் ரூ.32,200 ஆக கருதப்பட்டு, பின் அவரது சம்பளம் பதவி உயர்வு அடிப்படையில் ரூ.33,100 நிர்ணயம் செய்யப்படும்.

அதேபோல் ரூ.85,800 அடிப்படை சம்பளம் பெறும் அதிகாரி 26ம் நிலையில் இருந்து 29ம் நிலைக்கு பதவி உயர்வு பெறும் போது, அவருக்கு 26ம் நிலைக்கான சம்பள உயர்வு சேர்க்கப்பட்டு அவரது சம்பளம் ரூ,88,400 ஆக கருதப்படும். பின் பதவி உயர்வு அடிப்படையில் அவரது சம்பளம் ரூ.1,23,400 ஆக நிர்ணயம் செய்யப்படும். (ஆ) சம்பள உயர்வு தேதியிலிருந்து கணக்கிடப்படும் சம்பள விகிதம்: ரூ.31,300 அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர் 8ம் நிலையில் இருந்து 10ம் நிலைக்கு பதவி உயர்வு செய்யப்படும்போது, பதவி உயர்வு நாளில் இருந்து அடுத்த சம்பள உயர்வு தேதி வரை அவரது சம்பளம் ரூ.33,200 ஆக கருதப்பட்டு பின் 34,100 ஆக நிர்ணயிக்கப்படும். இது குறித்து விரிவான பட்டியலை அரசுத்துறையின் அனைத்து செயலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

TET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009- அடிப்படையில் 23-08-2010 க்குப் பிறகு அரசு மற்றும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் TET அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அமலுக்கு வந்தது.

ஆரம்பத்தில் தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்கள் சற்றே தாமதமாக அமலாக்கம் செய்தன. அதன்படி கடந்த 15-11-2011 அன்று அரசாணை 181 உருவாக்கம் பெற்றது. ஆனால் அதை தமிழகம் முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களில் முறையாக செயல்படுத்த பல மாதங்கள் ஆனது.

இந்த இடைவெளியில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு TNTET நிபந்தனைகள் அப்போது இல்லை.

ஆனால் அதன் பின்னர் அதே ஆசிரியர்கள் அனைவருக்கும் TNTET நிபந்தனைகள் பொருந்தும் எனவும், விரைவில் TETல் கட்டாயத் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர இயலும் என்ற நிபந்தனைகளில் தள்ளப்பட்டனர்.

அன்றிலிருந்து இன்று வரை ஊதியம் மட்டுமே தரவும், மற்ற பணிப்பயன்கள் மறுக்கப்பட்ட நிலையிலும் இந்த நிபந்தனை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

சுமார் பத்தாயிரம் ஆசிரியர்களுக்கும் மேலாக இருந்த இந்த வகை TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பல்வேறு வகைகளில் TETலிருந்து முழுவதும் விலக்கு கிடைத்தது.

தற்போது அரசாணை 181 & 90  போன்றவற்றைத் தாண்டி, சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழுவதும் விலக்கு தரப்பட்ட சூழலில் 15-11-2011 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் TET எழுத கட்டாயம் என்பதற்கு கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை கொடுத்து உத்தரவிட்டது.

ஆயினும் கடந்த மாதம் வெளிவந்த பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் அடிப்படையில் பார்க்கையில் 23-08-2010 பின்னர் பணி நியமனம் பெற்ற அனைவருக்கும் TET கட்டாயம் என்பது மீண்டும் வலியுறுத்தி உள்ளது தெளிவாகிறது.

இதனிடையே சுமார் 500 க்கும் மேற்பட்ட பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து முழுவதும் விலக்கு மற்றும் பணிப்பாதுகாப்பு வேண்டி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடந்து உள்ளனர்.

24-10-17ல் வந்த இந்த வழக்குகளின் அடுத்த கட்ட வாதம் வரும் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குழப்பங்கள் நிகழும் இந்த வகை TNTET நிபந்தனை ஆசிரியர்களின் நீதிமன்ற வழக்குகளுக்கான தீர்வு அல்லது வாபஸ் சார்ந்த நெறிகள் விரைவில் வர வேண்டுமாகில் தமிழக அரசின் கல்வித் துறையின் கருணைப் பார்வைபட்டால் மட்டுமே  யாருக்கும் பாதிப்பு இல்லாத நல்ல தீர்வு ஏற்படும் என்பதே உண்மை.

23-08-2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க தமிழக அரசு TNTET லிருந்து முழு விலக்கு கொடுத்து பணிப் பாதுகாப்பு தந்து  விரைந்து அரசாணை வெளிவிட்டு  இந்த வழக்குகளை தீர்த்து வைக்க வேண்டும் என ஆசிரியர் அமைப்புகள் இன்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

புதிய ஊதியம் நிர்ணயம் செய்கையில் ஆசிரியர்கள் விருப்பம் ( options )கவனிக்க வேண்டியவைகள் நான்கு:

புதிய ஊதியம் நிர்ணயம் செய்கையில் ஆசிரியர்கள் விருப்பம் ( options )கவனிக்க வேண்டியவைகள் நான்கு:
1. 01.01.2016 இல்விருப்பம் தெரிவித்து ஊதியத்தை நிர்ணயம் செய்வது.

2.ஆண்டு ஊதிய உயர்வு நாளில் நிர்ணயம் செய்வது .உதாரணமாகஒர்

ஆசிரியரது ஆண்டு ஊதிய உயர்வு நாள் ஏப்ரல் அல்லது ஜூலைஅக்டோபர் எனில் அவர் தனது புதிய ஊதிய நிர்ணயத்தை ஏப்ரல்ஜூலை அல்லது அக்டோபர் மாதத்தில் புதிய ஊதியத்தை நிர்ணயம்செய்ய விருப்பம் தெரிவிக்க முடியும்.

3. 01.01.2016 க்குபதிலாக, தேர்வு நிலை ,சிறப்பு நிலை பெற்ற நாளில்கூட விருப்பம் தெரிவித்து ஊதியத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம்.

4. 01/01/2016 க்குபிறகு பதவி உயர்வு பெற்றிருப்பின் 1.1.16 க்கு பதிலாகபதவி உயர்வு பெற்ற நாளில் கூட விருப்பம் தெரிவித்து ஊதியநிர்ணயம் செய்ய முடியும் . ஏனெனில் 1.1.16 இல் ஊதிய நிர்ணயம்செய்வதை விட பதவி உயர்வு பெற்ற நாளில் ஊதிய நிர்ணயம்செய்தால் ( இடைநிலை ஆசிரியர்கள் 2800 தர ஊதியம் பெற்றவர்கள்கவனிக்க ) ஊதியம் கூடுதலாக கிடைக்கலாம் .

இந்த நான்கு வழிகளில் ஊதியம் நிர்ணயம் செய்து பார்த்து எதுதங்களுக்கு அதிகபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தருகிறதோ அந்தஊதிய நிர்ணயத்திற்க்கு விருப்பம் ( option ) எழுதி கொடுங்கள்

இது தான் அரசாணை எண்:147


உதயசந்திரன் தாக்கல் செய்த பதில் மனு:கல்வி தரத்தை உயர்த்தவும், நுழைவு தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றி எழுதும் வகையிலும், பாடத்திட்டத்தை மாற்ற, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தலைமையில், உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கலைத்திட்டம் மற்றும் தேர்வு சீரமைப்புக்காக, மூன்று துணை குழுக்களும் அமைக்கப்பட்டு, அறிக்கை பெறப்பட்டுள்ளது. ஒன்று முதல் பிளஸ் 2 வரை, பல ஆண்டுகள் பழமையான பாடத்திட்டத்தை மாற்ற வேண்டிய தேவையுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் இதர பாட வாரிய திட்டங்களை விட, மேலான பாடத்திட்டம் தயாரிக்க வேண்டும் என, கூட்டத்தில் முடிவானது. தொழிற்கல்வியில், 12 வகை பாடப்பிரிவுகளுக்கும், பாடத்திட்டத்தை மாற்ற வேண்டியுள்ளது.

ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை சேர்க்கவும்,

பிளஸ் 1க்கு பொது தேர்வு கொண்டு வரவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1க்கு, 2018 – 19 மற்றும் பிளஸ் 2வுக்கு, 2019 – 20ல், புதிய பாடத்திட்டம் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.,யை விட தரமான, பாட புத்தகங்கள் வழங்கப்படும். அதற்காக, அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தர், எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில், 10 பேர் இடம் பெற்ற, கலைத்திட்ட தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது…இது தான் அரசாணை:147..

திரு மணிவண்ணன்,
மாநில நிர்வாகச்செயலாளர்,
9789142782 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.