Saturday, 21 June 2025

"யார் தான் இவன்?" (சிறுகதை)

 "யார் தான் இவன்?"

(சிறுகதை)

“ஏங்க! நான் பேசுறது உங்க காதில் விழலையா? ஐ

Tuesday, 4 March 2025

தூய அன்பிற்கு முன்னால் பணத்திற்கு எந்த மதிப்பும் இல்லை.

தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் புத்தர் மீது பேரன்பு கொண்டவர். திடீரென்று, இரண்டு நாட்களாக அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அவர் குடும்பம் பட்டினி கிடந்தது. என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. அவரை நம்பி கடன் கொடுப்பவர்கள் யாரும் இல்லை.

மன வருத்தத்துடனும், சிந்தனையுடனும் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அருகிலிருந்த குளத்தில் ஒரு தாமரை மலர்ந்திருப்பது அவர் பார்வையில் பட்டது. அந்த மலர், வழக்கமான தாமரை மலராக இல்லை. அபூர்வமான அழகுடன் இருந்தது. அடர் சிவப்பு நிறத்தில் சூரிய ஒளியில் தகதகவென்று மின்னிப் பிரகாசித்தது. அவர் குளத்தில் இறங்கி அந்த மலரைப் பறித்தெடுத்தார். அந்த அபூர்வ மலரை யாருக்காவது விற்றால் ஏதாவது பணம் கிடைக்கும் என்று நினைத்தார் அவர். அந்த வழியாக வந்த வியாபாரி ஒருவர், தொழிலாளியின் கையில் மிக அழகான பூ இருப்பதைப் பார்த்தார்.

அவர் கேட்டார்  "அந்த மலரை என்னிடம் விற்று விடுகிறாயா...? நான் அதற்கு நூறு ரூபாய் தருகிறேன்''.. சற்று நேரம் கழித்து அந்த வழியாக செல்வந்தர் ஒருவர் வந்தார். அவரும் கேட்டார் "இந்த மலரை என்னிடம் விற்று விடுகிறாயா...? நான் இதற்கு இருநூறு ரூபாய் தருகிறேன்...''

இவ்வளவு அதிகமான விலைக்கு இந்த மலரைக் கேட்கிறார்களே என்று தொழிலாளிக்கு மிகவும் வியப்பாக இருந்தது. சற்று நேரத்திற்குப் பிறகு அதே வழியில் அந்த நாட்டு ராஜா வந்தார். தாமரை மலரைப் பார்த்து மகிழ்ந்து அவரும் கேட்டார் "இந்த மலரை என்னிடம் கொடுத்து விடுகிறாயா...? இதற்கு நான் என்ன விலை வேண்டுமானாலும் தருகிறேன்...''

தொழிலாளி, ராஜாவிடம் பணிவுடன் கேட்டார். வணக்கத்திற்குரிய ராஜாவே... அப்படி இந்த மலரில் என்ன தான் இருக்கிறது? ஏன் இதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறீர்கள்...".

ராஜா சொன்னார் "இந்த மலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், அபூர்வமாகவும் இருக்கிறது. இந்த நகரத்திற்குப் புத்தர் வந்திருக்கிறார்.
அவர் காலில் வைத்து வணங்குவதற்காகத் தான் இதைக் கேட்கிறேன்..''

புத்தரைக் காண வேண்டும் என்று வெகுகாலமாக ஏங்கிக் கொண்டிருந்த தொழிலாளி சொன்னார். "அப்படியென்றால் ராஜாவே, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இந்த மலரை நானே அவர் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்". அந்தத் தொழிலாளி ஓடிச் சென்றார். அரிய தாமரை மலரை புத்தரின் காலடியில் வைத்து வணங்கி நின்றார். அப்போது புத்தர் கனிவாக அவரிடம் கேட்டார். "சகோதரா, இந்த மலரை நீ ராஜாவிற்கு விற்றிருந்தாயானால் நீ மட்டுமின்றி உன் பல தலைமுறைகளும் வளமாக வாழ்வதற்கான செல்வம் உனக்கு கிடைத்திருக்குமே... நீ ஏன் அப்படிச் செய்யவில்லை?''

தொழிலாளி கண்கலங்கிச் சொன்னார்.. "ஐயா... உலகின் ஞானியே, நான் இந்த மலரைப் பறித்த போது இது ஒரு தாமரை மலராக மட்டுமாகத் தான் இருந்தது. ஆனால், நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்த போது, இந்த மலர் என் இதயத்தின் அன்பாக மாறி விட்டது. என் இதயத்தைச் சமர்ப்பிப்பதற்கு ஏற்ற இடம் உங்கள் காலடிகளைத் தவிர வேறு இல்லையே..''

புத்தர் எழுந்து அவரைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சொன்னார். "இனிய சகோதரா... வறுமையில் இருந்தாலும் இந்த உலகத்தின் அரசன் நீ தான், நிம்மதியாகப் போ.... உன் வாழ்க்கை வளமாகும்.." 

தூய அன்பிற்கு முன்னால் பணத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. இந்த உலகில் விலை மதிப்பிட முடியாத ஒரே ஒரு விஷயம்

Wednesday, 29 January 2025

உலகில் நாம் அனைவரும் ஜெயிக்கப் பிறந்தவர்கள்.

ஒருவன் தன்னுடைய தொழிலில் 
படுதோல்வியடைந்த நிலையில், தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிரில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார். 
சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பைத் தொட்டியில் தனக்குத் தேவையான பாட்டில்களை நிரப்பி எடுத்துச் சென்றார். மீண்டும் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பிளாஸ்டிக் தட்டு, பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார். அதன்பின் ஒரு நாய் வந்து எச்சில் இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டுச் சென்றது. 

கடைசியாக வந்த ஒரு பசு, குப்பையில் கிடந்த பச்சிலையை சாப்பிட்டு தன் பசியை போக்கிக் கொண்டது. இதைப் பார்த்த, படு தோல்வியடைந்த அந்த நபர்,
 கூறிய வார்த்தைகள் 'ஒரு சிறிய குப்பைத் தொட்டியில் இத்தனை பேர் பிழைத்து வாழ்கிறார்கள் என்றால், இந்த பரந்து விரிந்து கிடக்கும் இவ்வுலகில் நாம் அனைவரும் எப்படி எல்லாம் பிழைத்து வாழலாம் என்று, தன் மனதை திடப்படுத்திக் கொண்டு இனி தனக்கு தோல்வியே கிடையாது இனி வரும் காலங்கள் பொற்காலமே, மிக பெரிய வெற்றியே என தன்னம்பிக்கையுடன் தன் பழைய தொழிலை தொடங்கச் சென்றார். இந்த பரந்த உலகில் நாம் அனைவரும் ஜெயிக்கப் பிறந்தவர்கள்..!

Tuesday, 19 November 2024

மற்றவர்களை ஏமாற்ற நினைக்கும் முன்..

ஒரு ஊரில் ஒருவர் மளிகைக்கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். ஒருநாள் அவருடைய கடையின் முன்பாக இரண்டு சிறுவர்கள் ரோட்டில் நின்று கொண்டு சண்டை போட்டு கொண்டிருந்தனர். அதை கடையில் இருந்து பார்த்து கொண்டிருந்த அவர், சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களையும் அழைத்தார். அந்த சிறுவர்கள் இருவரும் அவர் முன்பு வந்து நின்றனர்.

அவர் அந்த சிறுவர்களிடம் எதற்காக இருவரும் சண்டைப் போட்டுக் கொள்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்களில் ஒருவன், " ஐயா.. நாங்கள் இரண்டு பேரும் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது எங்கள் கண்ணில் இந்த 50 ரூபாய் நோட்டு தரையில் கிடந்ததை இருவரும் பார்த்தோம். ஆனால் இவன், நான் தான் முதலில் பார்த்தேன். அதனால் எனக்கு தான் சொந்தம் என்கிறான். ஆனால் நான் தான் முதலில் பார்த்தேன். இதன் காரணமாகத்தான் இருவரும் சண்டையிட்டுக் கொள்வதாகக் கூறினான். மேலும், இப்போது சொல்லுங்கள் இந்த 50 ரூபாய் நோட்டு யாருக்கு சொந்தம்" என்று கேட்டான்.

விபரத்தைக் கேட்ட பிறகு அவர், இருவரும் சிறுவர்களாக இருப்பதால் அவர்களை சுலபமாக ஏமாற்றி அவர்கள் வைத்திருக்கும் 50 ரூபாயை அபகரிக்க மனதுக்குள் திட்டம் தீட்டிய அவர், இருவரிடமும் "நான் சற்று முன்பு கடைக்கு நடந்து வந்து கொண்டிருக்கும் போது, என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. நல்லவேளை அது உங்கள் கையில் கிடைத்தது. ரொம்ப நல்லதா போச்சு. இருவரும் இந்த 10 ரூபாயை வைத்துக்கொண்டு அந்த 50 ரூபாயை என்னிடம் கொடுத்துவிடுங்கள்" என்று கேட்டார். இருவரும் "சரி, இது உங்கள் பணம் இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று அவரிடம் கொடுத்தனர். பதிலுக்கு அவரும் 10 ரூபாய் நோட்டை எடுத்து இருவரிடமும் கொடுத்தார். இருவரும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு ஒற்றுமையாகச் சென்றனர்.

அந்த சிறுவர்களிடம் இருந்து எப்படியோ ஏமாற்றி 50 ரூபாயை வாங்கி விட்டோம் என்ற சந்தோஷத்துடன், எப்படியோ ஒரு வேலையும் செய்யாமல் 40 ரூபாயை லாபம் என்ற மகிழ்ச்சியுடன் அந்த 50 ரூபாய் நோட்டை எடுத்துப் பார்த்தவர் அதிர்ச்சியடைந்தார். அவருடைய அதிர்ச்சிக்குக் காரணம் அந்த இரண்டு சிறுவர்களும் கொடுத்த 50 ரூபாய் நோட்டில் ஒருபக்கம் வெள்ளையாக இருந்தது. அப்போதுதான் அவருக்குப் புரிந்தது அது சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் விளையாட்டு ரூபாய் நோட்டு என்று.. அடடா, நம்முடையப் பணம் 10 ரூபாய் வீணாகப்போய் விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேலையில், அந்த சிறுவர்கள் இருவரும் தனது தந்தையுடன் கடைக்கு வந்தனர்.

சிறுவர்களின் அப்பா, கடைக்காரரிடம், சற்று முன்பு இவர்கள் இருவரும் கீழே கிடந்ததேன்று உங்களிடம் 50 ரூபாய் நோட்டை கொடுத்தார்களே அதை திருப்பித் தரும்படியும், அதோடு நீங்கள் கொடுத்த 10 ரூபாயை நீங்களே வைத்துக்கொள்ளும்படியும் கூறிவிட்டு, அவர் கொடுத்த 10 ரூபாய் நோட்டை மேசை மீது வைத்தார்.

கடைக்காரருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. 50 ரூபாயை கொடுக்கவில்லை என்றால் ஏன் என்று கேட்பார். சிறுவர்கள் விளையாட்டு 50 ரூபாய் நோட்டைத்தான் கொடுத்தார்கள் என்று சொன்னால், பிறகு எதற்கு நீங்கள் 10 ரூபாயை கொடுத்தீர்கள் என்று கேட்பார். வாங்கவே இல்லை என்று சொன்னால், என்னை விட இந்த சிறுவர்களைத்தான் இந்த உலகம் நம்பும் என்று நினைத்துக் கொண்டே 10 ரூபாயை எடுத்துக் கொண்டு 50 ரூபாயை அச்சிறுவர்களின் அப்பாவிடம் கொடுத்தார்.

அன்றிலிருந்து அவர்  சிறியவர்கள் ஆனாலும் சரி, பெரியவர்கள் ஆனாலும் சரி, யாரையும் ஏமாற்றாமல் வாழ வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு வாழ ஆரம்பித்தார்.

#தத்துவம் :

மற்றவர்களை ஏமாற்ற நினைக்கும் முன் நாமும் ஒருநாள் மற்றவர்களால் ஏமாற்றப்படுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்வதே, வாழ்வுக்கு சுகம் தரும் திறவுகோல்

 மகிழ்ச்சி

ஒரு ஊரில் ஒருவர் வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார்.

கற்றல் - ஒன்றை மட்டுமே கற்றுக் கொள்வது நல்லது

 கற்றல்

ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே சொல்லிக் கொடுத்த குருநாதர்