Wednesday, 8 November 2017

வேலைவாய்ப்பு: தேசிய திட்ட அமலாக்கத்துறையில் பணி!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தேசிய திட்ட
அமலாக்கத்துறையில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1,270

பணியின் தன்மை: உதவி பேராசிரியர்

சம்பளம்: ரூ.70,000/-

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.12.2017 முதல் 15.12.2017

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-

கடைசித் தேதி: 19.11.2017

மேலும் விவரங்களுக்கு http://www.npiu.nic.in/PDF/News/Advt.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

Tuesday, 7 November 2017

2600-ம் ஆண்டில் பூமி தீப்பந்தாக மாறும்: விஞ்ஞானி காவ்கிங் எச்சரிக்கை

இங்கிலாந்து இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் காவ்கிங் பெய்ஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பூமியில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு தக்கபடி எரிபொருள் தேவையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பூமி தொடர்ந்து வெப்பமயமாகி கொண்டே வருகிறது.

இதேநிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 600 ஆண்டுகளில் அதாவது 2600-ம் ஆண்டில் பூமி கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று மாறும்.

இதனால் பூமியில் உயிரினங்கள் மற்றும் தாவர வகையில் வாழமுடியாத சூழ்நிலை ஏற்படும். அனைத்தும் அழியும். ஆனால் மனிதர்கள் நினைத்தால் இன்னும் 10 லட்சம் ஆண்டுகளுக்கு உயிர்வாழ முடியும்.

அதாவது மனிதர்கள் சூரிய மண்டலத்தில் மிக அருகேயுள்ள ஆல்பா சென்டாரி என்ற துணை கிரகத்தில் குடியேறலாம் அல்லது பூமிக்கு அருகேயுள்ள புளூட்டோவுக்கு சென்று தங்கலாம்.

இவற்றில் சூரிய மண்டலத்துக்கு அருகேயுள்ள ஆல்பா சென்டாரி துணை கிரகம்தான் சிறந்தது என கருதுகிறேன். இக்கிரகம் பூமியில் இருந்து 400 கோடி மைல் தொலைவில் உள்ளது. இது செவ்வாய் கிரகத்தை விட குறைந்த தொலைவில் உள்ளது.

இக்கிரகத்துக்கு சிறிய விமானத்தில் ஒரு வாரத்திற்குள் செல்ல முடியும். எனவே அதற்கான ஏற்பாட்டை இன்னும் 20 ஆண்டுகளில் செய்து முடித்துவிடுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆதாருடன் இணைக்காவிட்டாலும் போன் இணைப்பு துண்டிக்கப்பட மாட்டாது: தொலைத்தொடர்பு துறை

அனைத்து வகை சேவைகளையும் ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுவரை வங்கி கணக்குகள், பான் எண், குடும்ப அட்டை, டிரைவிங் லைசென்சு ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

அரசின் சலுகைகளை பெற ஆதார் எண் இல்லாமல் முடியாது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செல்போனுக்கான சிம்கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் ‘‘லோக்நிதி’’ எனும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சிம்கார்டு பெற ஆதார் எண் அவசியம் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து ஆதார் எண் இணைக்கப்படாத செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பால் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால் மக்களுக்கு முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக தொலை தொடர்பு துறை புதிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘ஆதார் எண் இணைக்கப்படாத செல்போன் இணைப்புகள் எந்த காரணத்தை கொண்டும் துண்டிக்கப்படமாட்டாது’’ என்று கூறியுள்ளது.

மத்திய தொலை தொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்கா இது பற்றி கூறுகையில், ‘‘மக்களுக்கு புதிய செல்போன் இணைப்புகளை அதிக அளவில் கொடுக்க வேண்டும் என்பதே லட்சியமாகும். இணைப்பை துண்டிக்க வேண்டும் என்பது எங்கள் லட்சியம் அல்ல. என்றாலும் போன் இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கைகள் தொடரும்’’ என்றார்.

செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை என்று ஏற்கனவே தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர்கள் பகுதிநேர தொழில் செய்யலாமா?

இப்போதெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்களிலும், சாலையில் நடந்து செல்லும்போது வழிமறித்து கொடுக்கப் படுகிற துண்டு பிரசுரங்களிலும்,
‘பணியில் இருக்கும்போதே பகுதி நேரமாக தொழில் செய்யலாம்’ என்ற கவர்ச்சி கரமான வாக்கியங்களைப் பார்க்கிறோம். அது எப்படிப்பட்ட தொழிலாக இருந்தாலும் அரசுத்துறை முதல், தனியார் துறை வரை எதில் பணிபுரியும் ஊழியராக இருந்தாலும் அவரை அது கவரவே செய்கிறது.

பல தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு குறித்த ஒப்பந்தம் செய்யும் பொழுதே பகுதிநேரமாகவோ, முழு நேரமாகவோ எந்த தொழிலும் ஊழியர்கள் ஈடுபடக்கூடாது என்று எழுத்துப்பூர்வமாக சொல்லிவிடுகின்றனர். அதை மீறும்போது வேலை இழப்பு வரை பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு.

பொதுவாக தனியார் நிறுவனங்களில் இது அவ்வளவாக கண்காணிப்படுவது இல்லை. எனவே, எம்.எல்.எம்., சந்தைப்படுத்துதல் முதலிய பல்வேறு பகுதிநேர தொழில்களில் பல தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

ஆனால், இதுவே அரசு ஊழியராக இருந்தால் பிரச்சனை கொஞ்சம் பெரிது தான். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973-ன் படி ஒரு தமிழக அரசு ஊழியர் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ தொழில், வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. ஆனால், தங்களது கலைத்திறனை அவர்கள் வெளிப்படுத்தலாம். அதன்மூலம் கிடைக்கும் வருவாயை கணக்கில் காட்டலாம். அதற்கு தடையில்லை.

எடுத்துக்காட்டாக ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர், கவிதை எழுதும் திறனுடன் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தனது கவிதையைப் புகழ்பெற்ற ஒரு வார இதழுக்கு அனுப்பி அதற்கு சன்மானமாக ரூ.1000 பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அது சட்டவிரோதம் ஆகாது. காரணம், அது அவரது கலைத்திறனுக்கு கிடைத்த சன்மானம். எனவே அத்தொகைக்கு விதிவிலக்கு உண்டு. மாறாக, அவர் ஒரு பத்திரிகையை தொடங்கி நடத்தினால் அது சட்டவிரோதம்.

ஏனென்றால் பத்திரிகையின் உரிமையாளர்தான் பதிப்பாளர். அதன் லாபம் அனைத்தும் அவருக்கே போய்ச்சேரும். அதனால் பத்திரிகை நடத்துவது என்பது தமிழக அரசு ஊழியர் நடத்தை விதிகளை பொறுத்தவரை சட்ட விரோதமே. அரசு ஊழியர்கள் நீண்ட கால அடிப்படையில் பங்குகளில் முதலீடு செய்யலாமே ஒழிய பங்கு வர்த்தகம் செய்யக் கூடாது. அதேநேரத்தில் பரம்பரையாக விவசாய நிலத்தை கொண்டிருக்கும் ஒரு அரசு ஊழியர் விவசாயத்தின்மூலம் வருவாய் ஈட்டுவதை சட்டம் தடுப்பதில்லை.

இவ்விதிகளின்படி ஒரு குறிப்பிட்ட அரசு ஊழியர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தன்னுடைய மற்றும் குடும்ப உறுப்பினர்களது சொத்து விவரங்களை துறைத்தலைவருக்கு தெரிவித்தாக வேண்டும். அதாவது அரசு ஊழியர் களின் வருவாய்  விவரங்கள் முழுக்க முழுக்க அரசால் கண்காணிக்கப்படுகின்றன. தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒரு அரசு ஊழியர் சொத்து சேர்த்துவிடக்கூடாது என்பது தான் இந்த  விதிகளின்  நோக்கம்.

மேலும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை எந்த ஒரு குடிமகனும் அரசுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் எந்த அளவிற்கு அரசு ஊழியர்கள் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

அப்படி என்றால் ஒரு அரசு ஊழியர் தொழில் செய்யும் திறனோடு இருந்தால் அவர் அதை  செய்வதற்கு வாய்ப்பே இல்லையா என்கிறீர்களா? பணியில் இருக்கும்போது நிச்சயமாக வாய்ப்பு இல்லை. பணியிலிருந்து அவர் விலகினால் மட்டுமே அவர் தொழிலோ, வணிகமோ செய்யலாம்.

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் அறிவித்துள்ளார்.
தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுள்ளதால் படங்களை நடத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவிகளுக்கு 10 மணி நேர கராத்தே பயிற்சி

அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் பத்துமணி நேரம் கராத்தே பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவிகளுக்கு பாலியல், சமூக விரோதிகளின் தொந்தரவுகள் அதிகரித்துள்ளன.
மாநில குற்றவியல் ஆவண காப்பகத்தின் பதிவேடுகளின் மூலம் பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில், அரசு பள்ளி மாணவிகளில் 18 சதவீதம் பேர், பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பள்ளி மாணவிகளின் தைரியம், மனோதிடத்தை அதிகரிக்கவும் எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில் அளிக்கப்பட்டு வந்த கராத்தே பயிற்சியை, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது.வாரத்திற்கு ஒன்றரை மணி நேரம் என இரு வகுப்புகளும், மாதத்திற்கு தலா 10 மணி நேர பயிற்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி கூறியதாவது:அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் வட்டாரத்திற்கு அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு திறன்மிக்கபயிற்சியாளர்களை வைத்து கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வளரிளம் மாணவிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை அளிக்கும், என்றார்.

திருவாரூர் மாவட்டத்திற்கு தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று 08.11.2017 விடுமுறை அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்திற்கு தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

Friday, 3 November 2017

தேசிய திறனாய்வு தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' பெற வசதி

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வரும் ஆண்டுகளில் கல்வியை தொடர, மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது. இதை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வு, நாளை நடக்கிறது.
தமிழகத்தில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வை எழுத உள்ளனர். இதற்கான ஹால் டிக்கெட்டை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

வி.ஏ.ஓ., பதவிக்கு தனி தேர்வு இல்லை : டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

வி.ஏ.ஓ., எனப்படும் கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான தேர்வு, குரூப் - 4 தேர்விலேயே இணைத்து நடத்தப்படும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் அறிவிப்பு: டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படும், குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளுக்கும், வி.ஏ.ஓ., பதவிக்கும், பத்தாம் வகுப்பு தான் கல்வித் தகுதி.இரண்டு பதவிகளுக்கும், தனியாக தேர்வு நடத்தும்போது, குரூப் - 4 பணிகளுக்கு, 15லட்சம் பேரும், வி.ஏ.ஓ., பதவிக்கு 12 லட்சம் பேரும் விண்ணப்பிக்கின்றனர்.

வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பிக்கும், 60 சதவீதம் பேர், குரூப் - 4 தேர்வுக்கும் விண்ணப்பிக்கின்றனர்.தனியாக நடத்தும்போது, ஒவ்வொரு தேர்வுக்கும், 15 கோடி ரூபாய் செலவாகிறது. இரண்டு தேர்வுக்கும், தனித்தனியே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க, அதிக செலவாகிறது.இதுவரை நடந்த தேர்வுகளை ஆய்வு செய்ததில், ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 20 சதவீதம் பேர், மறு பதவிக்கு, மற்றொரு தேர்வு எழுதுவது தெரிகிறது.எனவே, குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளில், வி.ஏ.ஓ., தேர்வையும் இணைத்து. ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குரூப் - 4ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அந்தந்த பதவிக்கு, தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல்,வி.ஏ.ஓ., தேர்விலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.எனவே, பயிற்சி குறித்த பகுதி, தேர்வுக்கான பாடத் திட்டத்தில் தேவை இல்லை என, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்து உள்ளது.