Tuesday, 19 November 2024

இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்வதே, வாழ்வுக்கு சுகம் தரும் திறவுகோல்

 மகிழ்ச்சி

ஒரு ஊரில் ஒருவர் வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார்.

அதிக லாபம் இல்லை என்றாலும், தனது வாழ்க்கையை மகிழ்வுடன் நடத்தி வந்தார்.

அப்போது அந்த ஊரில் புதையல் இருக்கும் இடத்தை பற்றிய ஒரு வதந்தி பரவிக் கொண்டிருந்தது. பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையை பார்த்து நிற்கும் பொழுது,நமது நிழல் விழும் இடத்தில் புதையல் இருப்பதாக பேசிக் கொண்டனர்.

இதனைக் கேட்ட அவர், உடனே தனது வியாபாரத்தை விட்டுவிட்டு, மறுநாள் காலையில் புதையலை எடுக்க  பாலைவனத்தை நோக்கிச்

சென்றார்.மலையை நோக்கி நின்று தனது நிழல் விழும் இடத்தில் தோண்ட ஆரம்பித்தார்.

அதுவரை வியாபாரத்தில் கவனம் செலுத்தியவர் தற்போது  புதையலை எடுக்க காலையிலிருந்து நிழல் விழும் இடத்திலிருந்து தோண்டினார்.  மாலையாகும்போது நிழல் அவரது காலடிக்குள் வந்து விட்டது. இதனால் ஏமாற்றமடைந்த அவர் அழுது புலம்பிக் கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த துறவி ஒருவர் அவரிடம் "உன்னிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதை விட்டுவிட்டு இல்லாத ஒன்றைத்  தேடினால் துயரம் தான் ஏற்படும்" என்று கூறினார்.

நீதி:  இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்வதே, வாழ்வுக்கு சுகம் தரும் திறவுகோல்.

No comments:

Post a Comment