கற்றல்
ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே சொல்லிக் கொடுத்த குருநாதர்
மீது சீடனுக்கு கோபம். தன் நேரம் வீணாவதாய் வருந்தினான்.அவனுக்கு விஷயங்களை புரிய வைக்க நினைத்த குரு,கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பத்து கோழிகளை திறந்து விடச் சொன்னார்.
சீடன் திறந்து விட்டான். இப்போது திறந்துவிட்ட 10 கோழிகளையும் பிடித்து வர சொன்னார்.பத்தும் பத்து திசையில் ஓடிவிட்டன. அதனை பிடிக்க ஓடி ஓடி களைத்துப் போனான் சீடன். இப்போது குரு கழுத்தில் சிவப்பு நாடா கட்டப்பட்டிருக்கும் கோழியை மட்டும் பிடித்து வருமாறு கூறினார். அந்த ஒரு கோழியை மட்டும் குறி வைத்து துரத்தினான்.சிறிது நேரத்தில் பிடித்தும் விட்டான்.
குரு,"ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் பின்பற்று. பலவற்றைப் பிடிக்க நினைத்தால், எல்லாவற்றையும் இழந்து நிற்பாய். அதாவது ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே கற்றுக் கொள்வது நல்லது" என்பதை சீடனுக்கு விளக்கினார்.
No comments:
Post a Comment