Saturday, 24 February 2024

இல்லாதை நினைத்து....

.
'' *இல்லாதை நினைத்து* '
.......................................

     சில சமயம் நாம் நமது செயல்களை அதன் விளைவுகளை எண்ணி தேவைக்கு அதிகமாகவே கவலைப்படுகின்றோம்..

     நமக்கு கிடைத்து இருக்கும் இந்த வாழ்க்கையை நல்லவைகளுக்காக,இத்தனை ஆண்டுகள் இவ்வளவு நலத்தோடும், நீண்ட ஆயுளுடனும்,   வாழ்ந்ததற்காக மகிழ்ச்சி அடைந்தாலே இன்னமும் ஆனந்தமும், உடல் நலமும் பெற்று சிறப்பாக வாழ்வோம்.. 

     இருப்பதை வைத்து திருப்தி அடைவதும், இல்லாதை நினைத்து வருத்தப் படாமல் வாழும் மனம் உள்ளவர்கள் எவரோ அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுள் பெற்று மகிழ்வுடன் வாழ்வார்கள்.. 

     பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஜென்னி கால்மன்ட் என்ற பெண்மணி 122 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்தார்..

      21.12.1875 முதல் 4.8.1997 வரை வாழ்ந்தார். தனது கடைசி 12 ஆண்டுகள் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே வாழ்ந்தார்..

  இறுதி 5 ஆண்டுகள் அவருக்கு காது கேட்க வில்லை. பார்வையும் குறைந்து விட்டது..

      ஆனாலும் , இறுதிவரை மகிழ்சியாகவே வாழ்ந்து வந்து இருக்கிறார்..இவரது மகளும்,மகனும், பேரனும்கூட இவருக்கு முன்னால் காலமாகி விட்டார்கள்.

     இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததற்கு அவர் கூறியது,

     ’ நான் எப்போதும் எதற்காகவும், பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டேன்..மற்றும் என்னிடம் இல்லாதவற்றுக்கு கவலைப்படவும் மாட்டேன் என்று சொன்னாராம்..

       மகிழ்ச்சியான தினத்தை தொடங்க, காலை எழுந்ததும் நம்மிடம் என்ன இருக்கின்றதோ அதை வைத்து திருப்தி கொள்ள வேண்டும். 

      இவற்றை நாம் கடைப் பிடித்தால் நம்மை சுற்றி உள்ள அனைத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்...

No comments:

Post a Comment